Enable Javscript for better performance
எம்எல்ஏக்களை கண்டித்து போராட்டம்: 18 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    குமரி மாவட்ட எம்.எல்.ஏ.க்களை கண்டித்து போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் அமைப்பினர் 18 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு நடப்பதாக, மாவட்டத்தில் உள்ள திமுக -காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புகார் கூறினர். இது தொடர்பாக, கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளர் நடுக்காட்டுராஜாவை சந்தித்து, கடந்த 28 ஆம் தேதி புகார் தெரிவிக்க சென்ற எம்.எல்.ஏ.க்கள் அவருடன் வாக்குவாதம் நடத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கூட்டுறவு இணைப் பதிவாளரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் 6 எம்.எல்.ஏ.க்களை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் வியாழக்கிழமை மாலை விடுதலைச் சிறுத்தைகள், தலித் கூட்டமைப்பு உள்ளிட்ட தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
    இதையடுத்து, காவல் துறையினரின் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் திருமாவேந்தன், தலித் கூட்டமைப்பு மாவட்ட அமைப்பாளர் ராஜா, தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் ராஜேஷ்பாண்டியன் உள்ளிட்ட 18 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai