Enable Javscript for better performance
காவிரி பிரச்னை: ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காவிரி பிரச்னை: ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது

    By DIN  |   Published on : 31st March 2018 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆர்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் நாம்தமிழர் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்பாட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. 
    இதையடுத்து, பகல் 12 மணியளவில் கன்னியாகுமரி காவல்துறை ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீஸார் காந்தி மண்டபம் அருகே குவிக்கப்பட்டனர். இந்நிலையில், பிற்பகல் 2 மணியளவில் ஆர்பாட்டம் நடத்துவதற்காக வந்த நாம்தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மெஜில், கில்ட்டஸ் , கே.எஸ். டைசன், மகிழ்சிங், அமித்சிங் ஜிகிம்சன், மிதுன், சுரேந்திரன், கிறிஸ்டோபர், ஹில்மர், சுரேஷ், பதிமலர், நாகராஜ், தினேஷ் ஆகியோரை காந்தி மண்டபம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai