Enable Javscript for better performance
கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பத்மநாபபுரம் எம்எல்ஏ வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பத்மநாபபுரம் எம்எல்ஏ வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 31st March 2018 07:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தன்குற்றத்தை மறைக்க எம்.எல்.ஏ.க்கள் மீது பொய் புகார் அளித்த கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பத்மநாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
    கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான முதற்கட்ட வேட்புமனு தாக்கல் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. 27-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மனு தாக்கல் செய்தோரில் தகுதியுடையோர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை. மாறாக, பல தகுதியுடைய வேட்பாளர்களின் பெயர்கள் உள்நோக்கத்துடன் நிராகரிக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பல உறுப்பினர்களின் பெயர்கள் திடீரென நீக்கப்பட்டிருந்தன. ஒருசில கூட்டுறவு சங்கங்களில் எதிர்தரப்பினரை மனு தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை.
    இது தொடர்பாக இணைப் பதிவாளர் நடுக்காட்டுராஜைவை நேரடியாக சந்தித்து குறைகளைப் பேச 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றபோது, கூட்டுறவு தேர்தலில் எந்த தவறும் நடக்காதது போல பேசினார்.
    பேச்சுவார்த்தைக்குப் பிறகு தனது துறை அலுவலர்களுடன் கலந்தாலோசித்து தேர்தலில் நடைபெற்ற முறைகேட்டை ஒப்புக்கொண்டார். தற்போது, தான் குற்றமற்றவர் என்பதுபோன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கும் வகையில் பொய் புகார் கொடுத்துள்ளது மிகுந்த கண்டனத்துக்குரியது. அங்கு  வாதங்கள் நடைபெற்றதே தவிர, வன்முறைகள் எதுவும் நடைபெறவில்லை என எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai