Enable Javscript for better performance
டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை- Dinamani

சுடச்சுட

    

    டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை

    By DIN  |   Published on : 31st March 2018 07:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை டாக்டர்கள் தேவபிரசாத் ஜெயசேகரன், நினு ஜார்ஜ் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
    இதுகுறித்து மருத்துவக் குழுவினர் வியாழக்கிழமை கூறியது: வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சிறுநீரகம் செயலிழந்த நோயாளி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இவருடைய மனைவி தனது சிறுநீரகத்தை அவருக்கு தானம் செய்ய முன்வந்ததையடுத்து, அவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றனர். 
    இதையடுத்து தலைமை மருத்துவர் தேவபிரசாத் ஜெயசேகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். இதையடுத்து, நோயாளியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இது இந்த மருத்துவமனையில் நடைபெற்ற இரண்டாவது சிறுநீரக மாற்று அறுவை சிச்சையாகும்.
    இதுகுறித்து சிகிச்சை பெற்றவர் கூறியது: இம்மருத்துவமனையில்  குறைந்த செலவில் எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இதன்மூலம் நான் டயாலிஸ் சிகிச்சையை நிரந்தரமாக நிறுத்திவிட்டேன் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai