Enable Javscript for better performance
மார்த்தாண்டம் அருகே தீ விபத்தில் வீட்டின் மாடியில் இருந்த கூரை சேதம்- Dinamani

சுடச்சுட

    

    மார்த்தாண்டம் அருகே தீ விபத்தில் வீட்டின் மாடியில் இருந்த கூரை சேதம்

    By DIN  |   Published on : 31st March 2018 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மார்த்தாண்டம் அருகே தீ விபத்தில் முதியவர் வீட்டின் மாடியில் இருந்த கூரை சேதமடைந்தது.
    மார்த்தாண்டம் அருகேயுள்ள பல்லன்விளை கருப்புகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துபிள்ளை (70). அப்பகுதி குளக்கரையில் இவருக்கு காங்கிரீட் வீடு உள்ளது. வீட்டின் மாடியில் ஓலையால் கூரை அமைத்து, அந்தப் பகுதியில் சமையல் செய்து வந்தாராம். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சமையல் செய்தபோது அவர் வீட்டின் கீழ் பகுதிக்கு வந்தாராம். அப்போது நேரிட்ட தீ விபத்தில் மாடியில் இருந்த கூரை எரிந்து சேதமடைந்தது.
    இதையடுத்து, குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai