Enable Javscript for better performance
மார்த்தாண்டம் அருகே 910 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    மார்த்தாண்டம் அருகே 910 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்

    By DIN  |   Published on : 31st March 2018 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மார்த்தாண்டம் அருகே வேனில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 910 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய்யை போலீஸார் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
    மார்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் தலைமையில் போலீஸார் இரவிபுதூர்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில், வேனில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 26 கேன்களில், 910 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
    இது தொடர்பாக வேன் ஓட்டுநர் உண்ணாமலைக்கடை பகுதியைச் சேர்ந்த ஷிபுவை (26)  போலீஸார் கைது செய்தனர். மேலும், வேனுடன் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் மண்ணெண்ணெய்யை நாகர்கோவில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai