Enable Javscript for better performance
அனைவருக்கும் வீடு திட்ட பயனாளிகளுக்கு உடனடியாக பணம் வழங்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அனைவருக்கும் வீடு திட்ட பயனாளிகளுக்கு உடனடியாக பணம் வழங்க கோரிக்கை

    By DIN  |   Published on : 18th May 2018 06:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    களியக்காவிளை பேரூராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்ட பயனாளிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பணத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
    பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் படி ரூ. 2.10 லட்சம் அரசு மானியத்தின்படி வீடு கட்ட களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் 353 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணி ஆணை வழங்கப்பட்டது.  பணி ஆணை பெற்ற பயனாளிகள் அரசை நம்பி தங்களது குடிசை வீடுகளை இடித்து அகற்றிவிட்டு அரசு நிர்ணயித்த அளவில் வீடு கட்டும் பணிகள் மேற்கொண்டனர்.  
    பேரூராட்சி நிர்வாகம் இதுவரை 156 பயனாளிகளுக்கு முதல் தவணைக்கான தொகையும், 107 பயனாளிகளுக்கு இரண்டாம் தவணைக்கான தொகையும் வழங்கியுள்ளது. பெரும்பாலானோருக்கு முதல் தவணைக்கான தொகை கூட இதுவரை வழங்கப்படவில்லை. 
    இதனால் கடன் வாங்கி வீடு கட்டும் பணிகள் மேற்கொண்ட பயனாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
    இதுகுறித்து பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் என். விஜயேந்திரன் கூறியது: இம்மாவட்டத்தின் அனைத்துப் பேரூராட்சிகளிலும் இதே நிலை தொடர்வதாக கூறப்படுகிறது. எனவே, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டப் பயனாளிகளின் வீடுகளை பேரூராட்சி தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் விரைந்து பார்வையிட்டு, காலதாமதமின்றி அதற்கான தொகையை வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai