Enable Javscript for better performance
ஆரல்வாய்மொழி, தக்கலையில் பாஜக தர்னா- Dinamani

சுடச்சுட

    

    குமரி வர்த்தக துறைமுகப் பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, பாஜகவினர் தக்கலையில் வியாழக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, பத்மநாபபுரம் நகரத் தலைவர் ஸ்ரீகுமார் தலைமை வகித்தார். நகரப் பொதுச் செயலர்கள் கோபகுமார்,  பாபு, இளைஞரணி பொதுச் செயலர் சி.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் சி.சுகுமாறன்,  மாவட்டச் செயலர்கள் உண்ணி கிருஷ்ணன்,  கீதா,  மாவட்டப் பொதுச் செயலர் தங்கப்பன்,  நகரப் பொருளாளர் துளசிதாசன்,  நகரச் செயலர்கள் கண்ணன்,  ராஜேஷ்குமார், நிர்வாகிகள் என்.எஸ் குமாரதாஸ்,  நாகராஜன்,  வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்நகரில் மண்டலத் தலைவர் செந்தில்குமார் தலைமையிலும்,  குளச்சலில்  நகரத் தலைவர் கண்ணன் தலைமையிலும்,  வெள்ளமோடி  சந்திப்பில் வெள்ளிச்சந்தை பாஜக தலைவர் லிங்கேஷ்வரன்  தலைமையிலும் தர்னா போராட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாவட்ட நிர்வாகிகள் குமரி ப.ரமேஷ், மணிசாமி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    ஆரல்வாய்மொழி: செண்பகராமன்புதூரில் நடைபெற்ற போராட்டத்துக்கு, தோவாளை ஒன்றியத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றியப் பொதுச் செயலர் மகாதேவன் பிள்ளை,  கிளைத் தலைவர் வேலாயுத கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி பொதுச் செயலர் விக்னேஷ் வரவேற்றார். மாவட்டச் செயலர் விசு,  மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம்,  மாவட்ட பார்வையாளர் ஈசை.கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
    இதில்,  இளைஞரணி மாவட்ட பார்வையாளர் பத்மநாபன்,  மாவட்ட கலை இலக்கிய பிரிவு செயலர் அருண் கோபால்,  மாவட்ட வர்த்தக பிரிவு செயலர் முருகன்,  மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலர் சுடலைமுத்து,  ஒன்றிய பிரசார பிரிவு தலைவர் இசக்கிமுத்து பிள்ளை,  மதுகிருஷ்ணன்,  நகரத் தலைவர் மகாதேவன் பிள்ளை, நெசவாளர் பிரிவு மகாதேவன் பிள்ளை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai