Enable Javscript for better performance
கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள்நாடாளுமன்ற ஒருங்கிணைப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பு விழா

    By DIN  |   Published on : 18th May 2018 06:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழித்துறை மறைமாவட்ட  கிட்ஸ் குழந்தைகள் நாடாளுமன்ற ஆண்டு விழா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு விழா அழகியமண்டபத்தில் நடைபெற்றது. 
    திருச்சி சமூக அமைப்பு தாசோஸ்  இணை இயக்குநர்  ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். கிட்ஸ் செயல் இயக்குநர் ஜான் மைக்கேல் ராஜ் முன்னிலை
     வகித்தார். முளவிளை குழந்தைகள் நாடாளுமன்ற உள்துறை அமைச்சர் செல்வன் ஆலன் மேத்யு வரவேற்றார். கோட்டாறு  மறை மாவட்ட  அருள்பணியாளர் எம்.சி.ராஜன் சிறப்புரையாற்றினார். கிட்ஸ் மக்கள் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் எலியாஸ் வாழ்த்திப் பேசினார்.  தாசோஸ் திட்ட அலுவலர் செல்லபாண்டி மாவட்ட நிர்வாகத் தேர்தலை நடத்தினார். 
    முன்னாள் மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு விழாவும்,  புதிய நிர்வாகிகளுக்கு  வாழ்த்துகளும், வரவேற்பும் அளிக்கப்பட்டன. பின்னர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், சபாநாயகர்,  அமைச்சர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியின் இடையிடையே குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
    விழாவில் சிலுவைபுரம்,  நல்லாயன்புரம்,  முளவிளை, மாத்திரவிளை,  பட்டரிவிளை, கோணங்காடு, மண்ணான்விளை, காப்புக்காடு ஆகிய பகுதிகளிலுள்ள குழந்தைகள் நாடாளுமன்றங்களிலிருந்து வந்திருந்த  குழந்தைகள் மற்றும் வழிகாட்டிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
    கிட்ஸ் திட்ட அலுவலர் மிக்கேலம்மா, குழந்தைகள் நாடாளுமன்ற வழிகாட்டிகள் சீதா ஜாய்ஸ் விஜயா ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai