Enable Javscript for better performance
குமரி அருகே குடிசைமாற்று வாரியம் மூலம் ரூ. 38 கோடியில் 480 வீடுகள் கட்டும் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    குமரி அருகே குடிசைமாற்று வாரியம் மூலம் ரூ. 38 கோடியில் 480 வீடுகள் கட்டும் பணி தொடக்கம்

    By DIN  |   Published on : 18th May 2018 06:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் நகராட்சிப் பகுதியில் வசிக்கும் வீடில்லா குடிசைவாசிகளுக்காக வட்டக்கோட்டை அருகே குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 38 கோடி மதிப்பீட்டில் 480 வீடுகள் கட்டும் பணி தொடங்கியது.
    பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சொந்தவீடு இல்லாத வறுமைக் கோட்டின்கீழ் வசிக்கும் மக்களுக்கு சொந்தவீடு வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. 
    அதன்படி, நாகர்கோவில் நகராட்சிப் பகுதியில் வசிக்கும் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்காக ரூ. 38 கோடி மதிப்பீட்டில் 480 வீடுகளை கட்ட அரசு முடிவு செய்தது. ஆனால் நாகர்கோவில் நகராட்சிப் பகுதியில் ஒரே இடத்தில் பல ஏக்கர் நிலப்பரப்பு நிலம் இல்லாததால், அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அஞ்சுகிராமம் பேரூராட்சி பால்குளம் பகுதியில் அதற்காக சுமார் 4 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 
    இந்தக் குடியிருப்பில் கட்டப்படவுள்ள ஒவ்வொரு வீடும் 400 சதுரஅடி பரப்பில் ஒருபடுக்கை அறை வசதியுடன் அமைய உள்ளது. 
    மேலும் இந்த குடியிருப்பு வளாகத்தினுள் சாலை, தெருவிளக்கு, கழிவுநீரோடை,  வணிக வளாகம், அங்கன்வாடி போன்றவையும் அமையவுள்ளன. 15 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 32 வீடுகள் வீதம் கட்டப்படுகிறது. 90 சதவீதம் அரசு மானியமாகவும், 10 சதவீதம் பயனாளிகள் பங்களிப்பாகவும் செலுத்த வேண்டும்.
    கடற்கரைப் பகுதி என்பதாலும் உப்பளமாக இருந்த இடம் என்பதாலும் நவீன கட்டுமானப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது. இப்பணிகள் அனைத்தும் இன்னும் ஒன்றரையாண்டுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai