Enable Javscript for better performance
"குமரி மாவட்டத்தில் புறத்தொடர்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம்'- Dinamani

சுடச்சுட

    

    "குமரி மாவட்டத்தில் புறத்தொடர்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம்'

    By DIN  |   Published on : 18th May 2018 06:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மாவட்டத்தில் புறத்தொடர்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு:  கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள புறத்தொடர்பு பணியாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில், மாதம் ரூ.8 ஆயிரம்  தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட  உள்ளது. இப்பணியிடத்துக்கு விண்ணப்பிப்பதற்கு 10 அல்லது 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பதோடு ஒராண்டு அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். 40 வயதுக்குள்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  
    மாதிரி விண்ணப்ப படிவத்தை  ‌w‌w‌w.‌k​a‌n‌y​a‌k‌u‌m​a‌r‌i.‌t‌n.‌n‌i​c.‌i‌n  என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட பதவிக்கு தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை மே 28ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 3ஆவது தளம்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில் - 629 001 என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும் என  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai