Enable Javscript for better performance
கொல்லங்கோடு அருகே பைக் தீவைத்து எரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கொல்லங்கோடு அருகே வீட்டு முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    கொல்லங்கோடு காவல் சரகம்,  நடைக்காவு, வேளாண்விளை பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் (36). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். 
    இவர் தனது மோட்டார் சைக்கிளை புதன்கிழமை இரவு வீட்டுமுன் நிறுத்தியிருந்தாராம். இரவில் வீட்டு முன் சப்தம் கேட்டதையடுத்து எழுந்து பார்த்த போது, இவரது மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து கொண்டிருந்ததாம். இதையடுத்து அவர் தண்ணீர் ஊற்றி தீயை அணைப்பதற்குள் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸார் வழக்குப் பதிந்து, மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai