Enable Javscript for better performance
சின்னமுட்டம் மோதல்: சமாதானக் கூட்டம் நடத்த ஆட்சியரிடம் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சின்னமுட்டம் மோதல்: சமாதானக் கூட்டம்  நடத்த ஆட்சியரிடம் கோரிக்கை

    By DIN  |   Published on : 18th May 2018 06:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சின்னமுட்டம் மீனவர் கிராமத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக சமாதானக் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலர் எஸ்.அந்தோணி, மாவட்டத் தலைவர் கே.அலெக்ஸாண்டர், மாவட்ட கௌரவத் தலைவர் என்.அந்தோணி ஆகியோர் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் அளித்துள்ள மனு: 
    சின்னமுட்டம் பங்குப் பேரவை தேர்தலில் போட்டியிட்ட இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, கடந்த 10ஆம் தேதி இரவு நிகழ்ந்த அடிதடியில் சிலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீஸார் வழக்குப் பதிந்து சிலரை கைது செய்துள்ளனர்.
    இவ்வழக்கில், மோதல் சம்பவத்தில் தொடர்பே இல்லாத சில பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் ஊர் இருப்பதால் இப்பகுதி மக்கள் ஊரைவிட்டு வெளியேறி அருகே உள்ள ஊர்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
    இந்நிலையை மாற்றி ஊரில் அமைதியையும்,  ஒற்றுமையையும் ஏற்படுத்தி, மீன்பிடித் தடைக்காலம் நீங்கியதும் ஊர்மக்கள் தொழில் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை ஆட்சியர் உருவாக்க வேண்டும். அதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஊர் முக்கிய பிரமுகர்களையும், அருகே உள்ள கன்னியாகுமரி, ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களையும் உள்ளடக்கி சமாதானக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai