Enable Javscript for better performance
நாகர்கோவில் அருகே 1500 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கேரளத்துக்கு கடத்த முயன்ற  1500 லிட்டர் மண்ணெண்ணெயை நாகர்கோவில் அருகே அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    வெள்ளிச்சந்தை அருகே முட்டம் பகுதியில் பறக்கும் படையினர் வியாழக்கிழமை தனி வட்டாட்சியர் ராஜசேகர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் சென்றதால் அதை துரத்திச் சென்றனர். அம்மாண்டிவிளை அருகே அந்த வாகனத்தை மடக்கி பிடித்த போது அதன் ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார்.
    பின்னர் வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டதில் சுமார் 1500 லிட்டர் மண்ணெண்ணெய் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. 
    இதையடுத்து, மண்ணெண்ணெயை கைப்பற்றிய அதிகாரிகள், அதை இனயம் அரசு கிடங்கிலும், வாகனத்தை கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai