Enable Javscript for better performance
முள்ளங்கனாவிளையில் பாலம் அமைக்கும் பணி:வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    முள்ளங்கனாவிளையில் பாலம் அமைக்கும் பணி: வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

    By DIN  |   Published on : 18th May 2018 06:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முள்ளங்கனாவிளை தனியார் கல்லூரி அருகே மடைபாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.
    முள்ளங்கனாவிளை - நட்டாலம் எல்லை பகுதியில்  சாலையின் இருபுறமும் மழைநீர் ஒடை மற்றும் சாலையின் குறுக்கே மடைபாலம் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதையடுத்து கருங்கல்லிலிருந்து முள்ளங்கனாவிளை வழியாக மார்த்தாண்டம் பகுதிக்கு இயக்கப்படும் அரசு,  தனியார் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், எட்டணியிலிருந்து திரும்பி காக்கனாடு, பள்ளியாடி, நேசர்புரம், நட்டாலம் வழியாக மார்த்தாண்டத்துக்கு இயக்கப்பட்டன.
    இப்பகுதியில் பாலம் அமைப்பதற்காக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை துண்டித்ததால் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் செல்வதற்கு மிகுந்த சிரமம் 
    அடைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai