Enable Javscript for better performance
வெள்ளமடம் அருகே பாலப் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளமடம் அருகே பாலப் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 18th May 2018 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெள்ளமடம் அருகே பாலம் வேலை நடைபெற்று வரும் இடத்தில், ஊழியர்களை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகர்கோவிலை அடுத்துள்ள வெள்ளமடம் அருகே சகாயநகர் இல்லத்தார் தெருவுக்கு செல்லும் சாலையில் கழிவுநீர் ஓடை பகுதியில் பாலம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிறிய அளவில் தாற்காலிக பாதை அமைக்கப்பட்டுள்ளது. 
    பாலப் பணி தொடங்கி நீண்ட நாள்களான பின்பும் பணி முடியாததால் அந்த வழியாக சென்றுவர அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். அதோடு இப்பகுதியில் கோயில் கொடை விழா விரைவில் தொடங்க உள்ள நிலையில், பாலப்பணியை விரைந்து முடிக்க வலியறுத்தி பொதுமக்கள்  போராட்டம் நடத்தி வந்தனர். 
    இந்நிலையில் பாலப்பணி நடைபெறும் இடத்தில் பொதுமக்கள் செல்ல வசதியாக பணி செய்யும் ஊழியர்கள் வியாழக்கிழமை மணல் மூட்டைகளை அடுக்கி தாற்காலிக பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு திரண்ட மக்கள், கழிவுநீர் ஓடை மேல் பாலப்பணியை அவசரகால நடவடிக்கையாக முடிக்க வேண்டும். மணல் மூட்டைகளை அடுக்கி வைக்க அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தினர். இதையடுத்து மணல் மூட்டையால் தாற்காலிக பாதை அமைக்க வந்த ஊழியர்கள் திரும்பிச் சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai