பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து நாகர்கோவில், குலசேகரம், தக்கலையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து நாகர்கோவில், குலசேகரம்,  தக்கலையில்  காங்கிரஸார் வெள்ளிக்கிழமை கருப்பு தின ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து நாகர்கோவில், குலசேகரம்,  தக்கலையில்  காங்கிரஸார் வெள்ளிக்கிழமை கருப்பு தின ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,  காங்கிரஸார் அந்த தினத்தை கருப்பு தினமாக அறிவித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்துக்கு,  கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார்,  பிரின்ஸ்,  முன்னாள் மாவட்டத் தலைவர் அசோகன் சாலமன்,  நாகர்கோவில் நகரத் தலைவர் அலெக்ஸ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 இதில்,   வட்டாரத் தலைவர்கள் அசோக்ராஜ்,   முருகானந்தம்,  செல்வராஜ்,  வைகுண்டதாஸ்,  ஜெரால்டு,  கென்ன,டி  முன்னாள் கவுன்சிலர் சேவியர்,  அகில இந்திய காங்கிரஸ்  கமிட்டி  உறுப்பினர்கள் சாந்தி ரோஸ்லின்,  கிறிஸ்டிரமணி,  மாவட்ட நிர்வாகிகள் சிவகுமார், மகேஷ்லாசர், பாபு ஆன்றனி,   உதயம்,  எர்னல்ராஜ், ஜோசப்மணி, பேராசிரியர் சுந்தர்ராஜ்,   முன்னாள் நகரத் தலைவர்கள் ஐயப்பன், யூஜின்தாஸ், டாக்டர் அனிதா,  வடலி மகாலிங்கம்,  சுயம்பு , வழக்குரைஞர்கள் பாலசந்திரன், சீனிவாசன், தேவ், வக்கீல் ஜெயசிங், டான்போஸ்கோ, நடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குலசேகரம்:   குலசேகரம் சந்தை சந்திப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி   நடைபெற்ற இந்க ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் காஸ்டன் கிளிட்டஸ் தலைமை வகித்தார். இதில் கிள்ளியூர் பேரவைத் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமார் பேசினார். நகர காங்கிரஸ் தலைவர்கள் விமல் ஷெர்லின் சிங், எட்வின், அகஸ்டின், வினோத்ராய், பர்ணபாஸ், மாவட்டப் பொதுச் செயலர் மோகன் தாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.  
தக்கலை :  தக்கலை தலைமை அஞ்சல அலுவலகம் முன்பு  நடைபெற்று ஆர்ப்பாட்டத்திற்கு  மேற்கு மாவட்டத்  தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார்.  பத்மநாபபுரம் நகரத் தலைவர் ஹனுகுமார் முன்னிலை வகித்தார். இதில்,  மாநில பொதுக்குழு உறுப்பினர் லாரன்ஸ்,   நிர்வாகிகள் டாக்டர்கள்  டி.சி.ஜோசப்,  தம்பி விஜயகுமார். ஜாண் கிறிஸ்டோபர்,  ஜோன்ஸ் இம்மானுவேல்,  ஜாண் இக்னேசியஸ், ரத்தினகுமார்,  மலுக்கு முகம்மது,  பால்மணி, ஜேக்கப் சுதா  ராஜேஷ்குமார்  உள்பட பலர்  பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com