கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்பு சிகிச்சை தொடங்க வேண்டும்: மத்திய சுகாதார அமைச்சரிடம் வலியுறுத்தல்

கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்பு சிகிச்சைக்கான துறையை தொடங்க நிதி ஒதுக்க

கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்பு சிகிச்சைக்கான துறையை தொடங்க நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம், மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர்  பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
இதுகுறித்து மத்திய அமைச்சரின் நாகர்கோவில் முகாம் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணைஅமைச்சர்  பொன். ராதாகிருஷ்ணன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவை திங்கள்கிழமை (செப். 10) நேரில் சந்தித்து கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்பு சிகிச்சைக்கான துறையை பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் தொடங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.
அப்போது, இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது, கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வி. முரளிதரன் உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com