காந்தி, காமராஜர் மணி மண்டபங்கள் புனரமைப்பு பணி: அதிகாரிகள் ஆய்வு

கன்னியாகுமரியில் காந்தி மற்றும் காமராஜர் மணி மண்டபங்களில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை அதிகாரிகள் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

கன்னியாகுமரியில் காந்தி மற்றும் காமராஜர் மணி மண்டபங்களில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை அதிகாரிகள் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
கன்னியாகுமரி காந்திமண்டபம் மற்றும் காமராஜர் மணிமண்டபங்களில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் ) ரவீந்தர், மாவட்ட செயற்பொறியாளர்கள் குமரி கணேசன், விருதுநகர் நம்பிராஜன், திருநெல்வேலி (மருத்துவப் பணிகள்) நாகராஜ், உதவி செயற்பொறியாளர்கள் நாகர்கோவில்  மணிவண்ணன், கன்னியாகுமரி அனிஷ்,  மின்பிரிவு சத்யா உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும்,  இம்மாதம் 22-ஆம் தேதி நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த அதிகாரிகள், இவ்விழாவுக்கு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரின் வருகையையொட்டி, அரசு விருந்தினர் மாளிகை, புதிய விருந்தினர் மாளிகை, பாரதி விருந்தினர் மாளிகை ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com