நாகர்கோவிலில் தடையை மீறி ஊர்வலம்: 4 எம்எல்ஏக்கள் உள்பட 500 பேர் மீது வழக்கு

நாகர்கோவிலில் தடையை மீறி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் தடையை மீறி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் பல கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த ஊழலை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குமரி மேற்கு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், ரபேல் போர் விமான ஊழலைக் கண்டிப்பதாகக் கூறி, நாகர்கோவிலில் புதன்கிழமை மாலை  பேரணி, ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலை முன்பிருந்து தொடங்கிய பேரணி, நீதிமன்ற சாலை வழியாக டதி பள்ளி சந்திப்பிலுள்ள ராஜீவ் காந்தி சிலையை அடைந்தது. அங்கு ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், வசந்தகுமார், பிரின்ஸ், விஜயதரணி, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட 500- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதற்கிடையே, தடையை மீறி பேரணி நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் உள்பட 500 பேர் மீது கோட்டார் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com