தூய ஜெரோம் கல்லூரியில் கணிப்பொறித் துறை கருத்தரங்கு

நாகர்கோவில் தூய ஜெரோம் கல்லூரியில் கணிப்பொறிஅறிவியல் துறை மாணவ, மாணவிகளுக்கான திறன் வளர்க்கும் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரித் தாளாளர் அ. சுவக்கின் தலைமை வகித்தார். கணிப்பொறி அறிவியல் துறைத் தலைவி ஜ

நாகர்கோவில் தூய ஜெரோம் கல்லூரியில் கணிப்பொறிஅறிவியல் துறை மாணவ, மாணவிகளுக்கான திறன் வளர்க்கும் கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரித் தாளாளர் அ. சுவக்கின் தலைமை வகித்தார். கணிப்பொறி அறிவியல் துறைத் தலைவி ஜூலியட்ராணி வரவேற்றார். இதில், பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் 20 கல்லூரிகளைச் சேர்ந்த 220 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினரான தூய சவேரியார் கத்தோலிக்க கல்லூரிப் பேராசிரியர் இரா. சொ. ஷாஜீ, கணிப்பொறி அறிவியலின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை ம. வ. சம்பத் எழில்தாசன் வழங்கினார்.
இதில், கணிப்பொறி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ம. மில்டன்ஜோ, உதவிப் பேராசிரியர்கள் அன்பு, மேரிஅஸ்மி, ஜெசிலா உள்ளிட்டோர் கலந்துகெôண்டனர். பேராசிரியர் தர்ஷீலாடெர்லி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். உதவிப் பேராசிரியை சூ. நசீமா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com