பாபநாசத்தில் அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டு மாநாடு

தாமிரவருணி புஷ்கர விழாவின் 6ஆம் நாளன்று அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டு மாநாடு திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் நடைபெறுகிறது எனறார் சாமித்தோப்பு தலைமைப்பதி நிர்வாகி பாலஜனாதிபதி.


தாமிரவருணி புஷ்கர விழாவின் 6ஆம் நாளன்று அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டு மாநாடு திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் நடைபெறுகிறது எனறார் சாமித்தோப்பு தலைமைப்பதி நிர்வாகி பாலஜனாதிபதி.
தாமிரவருணி மகா புஷ்கர விழா அக். 11ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெற உள்ளது. விழாவில் தாமிரவருணி நதி தொடங்கும் பாபநாசம் முதல் கடலில் சங்கமிக்கும் புன்னைக்காயல் வரையிலான 149 படித்துறைகளில் அந்தந்தப் பகுதிகளிலுள்ள பொதுமக்களை ஒன்று திரட்டி 12 நாள்கள் புனித நீராடவும், நதிக்கு வழிபாடுகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்விழாவின்போது துறவியர் மாநாடு, சதுர்வேத பாராயணம், திருவாசகம் முற்றோதல், நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம், அகிலத்திரட்டு பாராயணம், விஷ்ணு பாராயணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதுதொடர்பாக சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதி வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் தலைமைப்பதி நிர்வாகி பால ஜனாதிபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தாமிரவருணி புஷ்கர விழாவின் 6ஆம் நாளான அக். 16ஆம் தேதி பாபநாசம் சேனைத் தலைவர் சமுதாய வளாகத்தில் அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டு மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான அய்யாவழி பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். அப்போது பல்வேறு தலைப்புகளில் அய்யா வழி சிறப்புகள் குறித்த சொற்பொழிவுகள் நடைபெறுகிறது என்றார்.
பேட்டியின்போது அகில இந்திய துறவிகள் சங்கத் தலைவரும், மகா புஷ்கர விழா அமைப்பாளருமான தவத்திரு ராமானந்த மகராஜ் சுவாமிகள், மும்பை அய்யா வழி பக்தர்கள் சங்கத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com