ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

"ஊரகப் பகுதியில் கழிப்பறையை சுத்தமாக பராமரிப்போருக்கு பரிசு'

கன்னியாகுமரி மாவட்ட ஊரகப் பகுதிகளில் கழிப்பறைகளை சுத்தமாக பராமரிப்போருக்கு தூய்மை பாரத இயக்கத்தின்

Updated On :24 ஜனவரி 2019, 1:13 am IST

கன்னியாகுமரி மாவட்ட ஊரகப் பகுதிகளில் கழிப்பறைகளை சுத்தமாக பராமரிப்போருக்கு தூய்மை பாரத இயக்கத்தின் கீழ்  பரிசு வழங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறை மூலம் சுத்தமான கழிப்பறை பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், கழிப்பறை வர்ணம் தீட்டும் சிறப்புப் போட்டி  கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. இம்மாதம் 31 தேதி வரை போட்டி நடத்தப்பட உள்ளது.
இப்போட்டியில் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், சுத்தமான கழிப்பறையை பயன்படுத்தும் விதமாகவும், ஊரகப் பகுதியிலுள்ள மக்கள் தாமாக முன்வந்து தங்களது கழிப்பறையை வர்ணம் தீட்டி அழகுபடுத்தி சுகாதார வாசகங்கள் இடம்பெறும் வண்ணம் அழகுபடுத்திட வேண்டும். இதில், சிறப்பாக வர்ணம் தீட்டிய  கழிப்பறை கொண்ட குடும்பத்திற்கு வட்டார அளவில் மற்றும் மாவட்ட அளவில் பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டியில் கழிப்பறையை வர்ணம் தீட்டுவதற்கு முன்பு உள்ள புகைப்படமும், மற்றும் வர்ணம் தீட்டி அழகுபடுத்திய பின் உள்ள கழிப்பறையின் புகைப்படத்தினையும், பயனாளியின்  பெயர் மற்றும் முகவரியுடன் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் சிறந்த 3 கழிப்பறைகள் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகம் மூலம்  பரிசுகள் வழங்கப்படும். மாவட்ட அளவில் சிறந்த 3 போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
சிறப்பாக வர்ணம் தீட்டி அழகுபடுத்திய கழிப்பறைகளின் புகைப்படங்களை மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் தேசிய அளவில் தனிநபர் கழிப்பறைக்கான பரிசு வழங்கப்படும். அதிக அளவில் கழிப்பறைகளுக்கு வர்ணம் தீட்டிய ஊராட்சிகளுக்கும், மாவட்டத்திற்கும் அதன் சதவீத அடிப்படையில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பரிசு வழங்கப்படும். எனவே, கிராம பகுதிகளில் உள்ள அனைத்து குடும்பங்களும் தங்களது பங்களிப்பை நல்கிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.