சுடச்சுட

  

  அருமனை அருகே பைக் கவிழ்ந்து 2 கட்டடத் தொழிலாளர்கள் பலி

  By DIN  |   Published on : 17th April 2019 09:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமரி மாவட்டம், அருமனை அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை நேரிட்ட  விபத்தில் 2 கட்டடத்  தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
  ஆறுகாணி அருகேயுள்ள கற்றுவா  பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கத்தின் மகன் தனேஷ் (24), கற்றுவா ஒருநூறாம் வயல் பகுதியைச் சேர்ந்த அனில்குமார் மகன் அபிமன்யூ என்ற மணிகுட்டன் (22),  கடையாலுமூடு காட்டாவிளையைச் சேர்ந்த செல்லன் மகன் ஜெகதீஷ் (35) ஆகிய மூவரும் கட்டடத் தொழிலாளிகள். 
  இவர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் களியக்காவிளையில் வேலை செய்துவிட்டு  செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.   மோட்டார் சைக்கிளை தனேஷ் ஓட்டிச் சென்றார்.  அருமனை அருகேயுள்ள குஞ்சாலுவிளை பகுதியை அடைந்தபோது,  சாலையின் குறுக்கே பாய்ந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதி கவிழ்ந்ததாம். இதில், ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மார்த்தாண்டம்  தனியார் மருத்துவமனையில் அபிமன்யூ இறந்தார்.  தனேஷ் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  
  இத்தகவலறிந்த அருமனை போலீஸார் வழக்குப் பதிந்து, சடலங்களைக் கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து 
  வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai