Enable Javscript for better performance
களியக்காவிளை அருகே பெண்ணை எரித்துக் கொல்ல முயற்சி: கணவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    களியக்காவிளை அருகே பெண்ணை எரித்துக் கொல்ல முயற்சி: கணவர் கைது

    By DIN  |   Published on : 17th April 2019 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    களியக்காவிளை அருகே மதுக்குடிக்க பணம் தர மறுத்த மனைவியை எரித்துக் கொல்ல முயன்றதாக, அவரது கணவரை போலீஸார் கைது செய்தனர்.
    களியக்காவிளை அருகேயுள்ள தெற்றிக்குழி, மேக்கேதட்டுவிளை பகுதியைச் சேர்ந்த தாவீது மகன் கிறிஸ்டோபர். தொழிலாளி. இவரது மனைவி வினிதா. இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. கிறிஸ்டோபருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் உள்ளதாம்.  மேலும், அவர் அடிக்கடி மதுக்குடித்துவிட்டு, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். 
    இந்த நிலையில் அவர், திங்கள்கிழமை மதுக்குடிக்க மனைவியிடம் பணம் கேட்டாராம். அதற்கு, வினிதா மறுத்தாராம். இதையடுத்து, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து வினிதா மீது ஊற்றி கிறிஸ்டோபர் தீ வைத்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து, கிறிஸ்டோபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai