பகலில் வெப்பம், பிற்பகலில் மழை: வாக்குச்சாவடிகளில் கூடுதல் வசதி செய்யப்படுமா?

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை வெப்பம், மழையால் வாக்குப்பதிவு பாதிக்காமல் இருக்கும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை வெப்பம், மழையால் வாக்குப்பதிவு பாதிக்காமல் இருக்கும் வகையில் வாக்குச்சாவடிகளில் கூடுதல் வசதி செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பை விட அதிகளவில் வெப்பம் நிலவி வருகிறது. வெப்பத்தால் பொதுமக்கள் பகலில் வீட்டை விட்டுவெளியே செல்ல அஞ்சும் நிலை இருந்து வருகிறது. இதனிடையே,  கடந்த 2 நாள்களாக இம்மாவட்டத்தில் பிற்பகலில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. மலையோரப் பகுதிகளில் கன மழையாகவும் பெய்து வருகிறது. 
வாக்குப்பதிவு நாளான வியாழக்கிழமை பிற்பகலில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
கூடுதல் வசதிகள்: இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் வெப்பம் மற்றும் மழையால் வாக்காளர்கள் பாதிக்காத வகையிலும்,  வாக்குப்பதிவு மந்தமடைந்து விடாமல் இருக்கும் வகையிலும் மையங்களில் தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளவும், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தடையற்ற மின்சாரம் கிடைக்கவும் அதிகதிறன் கொண்ட ஜெனரேட்டர் வசதியும் ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com