முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
குமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு:படகு சேவை பாதிப்பு
By DIN | Published On : 04th August 2019 12:59 AM | Last Updated : 04th August 2019 12:59 AM | அ+அ அ- |

கன்னியாகுமரியில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட கடல் நீர்மட்டம் தாழ்வுநிலை காரணமாக, படகு சேவை இரண்டரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
சர்வதே சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடல் பகுதியில் கடந்த சில நாள்களாக கடல் கொந்தளிப்பு, தாழ்வு நிலை காணப்படுகிறது. இதனிடையே, சனிக்கிழமை அதிகாலையில் கடல் நீர்மட்டம் தாழ்வாக காணப்பட்டதை அடுத்து, விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், காலை 8 மணிக்குத் தொடங்க வேண்டிய படகு சேவை, இரண்டரை மணி நேரம் தாமதமாக 10.30 மணிக்கு தொடங்கியது. எனினும், திருவள்ளுவர் சிலைக்கு நாள் முழுவதும் படகு சேவை ரத்து செய்யப்பட்டது.