முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் சார்பில் 6இல் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 04th August 2019 01:01 AM | Last Updated : 04th August 2019 01:01 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவிலில், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலர் செல்லசாமி வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசால், தொழிலாளர் நலச் சட்டங்கள் சிதைக்கப்படுகின்றன. பொதுமருத்துவத்தை சீர்குலைக்கும் மருத்துவ மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. அப்பாவிகளை விசாரணையின்றி சிறையிலடைக்கும் அதிகாரம் தேசிய புலனாய்வு அமைப்புக்கு வழங்கி சட்டம் நிறைவேற்பட்டுள்ளது. மோட்டார் தொழிலை நசுக்கும் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டித்து நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் மார்க்சிஸ்ட் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.