முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
விலவூர் சாரோட்டு குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 04th August 2019 12:59 AM | Last Updated : 04th August 2019 12:59 AM | அ+அ அ- |

பொதுமக்கள் விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் விலவூர் சரோட்டு குளத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கல்குளம் வட்டம், விலவூர் பேரூராட்சியில் உள்ள சாரோட்டுகுளம் 7.11 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மன்னர் காலத்தில் அரச பரம்பரையினர் பயன்படுத்திய குளம். அதிக பரப்பளவு கொண்ட இக்குளத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. பொதுமக்களும் இக்குளத்தை பயன்படுத்தினர்.
இக்குளம் பராமரிக்கபடாததால் பாழடைந்து தற்போது புதர் காடாக காட்சியளிக்கிறது. இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வள்ளியாற்றிலிருந்து நீர்வரத்து கால்வாய் போதிய பராமரிப்பின்றி பயனற்று காணப்படுகிறது. சாரோட்டுக் குளம் தற்போது மண் நிரம்பி காணப்படுகிறது. குளத்தின் கரைகள், பொதுமக்கள், கால்நடைகள் பயன்படுத்தும் படித்துறைகளும் சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து விலவூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பி.டி.எஸ். மணி கூறியது: குளங்கள் சீரமைக்கப்படுவதாக செய்திகளை நாளிதழ்களில் காண முடிகிறது. ஆனால் சாரோட்டுக் குளத்தை சீரமைக்க இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இக்குளத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.பி, எம்.எல்.ஏ. க்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் தொடர்ந்து மனு அனுப்பியுள்ளேன்.
தமிழக முதல்வருக்கும் இக்குளத்தை சீரமைக்கக் கோரி மனு அனுப்பப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையினர் இக்குளத்தை ஆய்வு செய்து, குளத்தின் கரைகள், மறுகால், படித்துறைகளை சீரமைக்க வேண்டும். குளத்தின் மேற்கு கரையில் சிறுவர் பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.