குமரி அருகே திறந்தவெளி கலையரங்கத்துக்கு அடிக்கல்

கன்னியாகுமரி அருகே வடுகன்பற்று கிராமம் முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் திறந்தவெளி கலையரங்கம்

கன்னியாகுமரி அருகே வடுகன்பற்று கிராமம் முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் திறந்தவெளி கலையரங்கம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இப்பகுதியில் கலையரங்கம் அமைக்க, மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 15 லட்சத்தை ஒதுக்கீடு செய்த ஏ.விஜயகுமார் எம்.பி., அடிக்கல் நாட்டி கட்டடப் பணியை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு, அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் குமாரவேல், ஊர் தலைவர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில், அரசு வழக்குரைஞர் ஏ.ஞானசேகர், நாகர்கோவில் கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குநர் டி.கனகராஜன், அரசு கால்நடை மருத்துவர் முருகேசன், பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்னம்பெருமாள், முன்னாள் துணைத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com