முனைவர் பட்ட மாணவியிடம் ரூ. 25 ஆயிரம் லஞ்சம்: கல்லூரி பேராசிரியர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே முனைவர் பட்ட மாணவியிடம் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்லூரி

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே முனைவர் பட்ட மாணவியிடம் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்லூரி பேராசிரியரை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மார்த்தாண்டம் அருகேயுள்ள உண்ணாமலைக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ரசல்ராஜ். மதுரை, மேலூர் அரசு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மேற்பார்வையில் புத்தன்சந்தை பகுதியைச் சேர்ந்த விஜு மனைவி கிளாடிஸ் புளோரா (30) முனைவர் பட்டத்துக்கான ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பது தொடர்பாக பேராசிரியர் ரசல்ராஜ், அந்த மாணவியிடம் ரூ. 1 லட்சம் கேட்டாராம். மாணவி தன்னிடம் அவ்வளவு தொகை இல்லையென கூறினாராம். இதையடுத்து ரூ. 25 ஆயிரம் தரவேண்டும் என வலியுறுத்தினாராம். இதையடுத்து அம்மாணவி மாவட்ட ஊழல் தடுப்புத் துறை போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். அவர்களின் அறிவுரைப்படி பேராசிரியரிடம் அம்மாணவி ரூ. 25 ஆயிரத்தை மார்த்தாண்டம் அருகே கீழ்பம்மம் பகுதியில் உள்ள கடையில் வைத்து கொடுத்தாராம். அப்போது அங்கு மறைந்திருந்த துணை கண்காணிப்பாளர் மதியழகன், ஆய்வாளர் ரமா உள்ளிட்டோர் அடங்கிய ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் பேராசிரியர் ரசல்ராஜை கைது செய்து, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும், அவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com