குழித்துறை அருகே தனியார் நிறுவனத்தில் ரூ. 1 லட்சம் திருட்டு
By DIN | Published On : 09th August 2019 07:06 AM | Last Updated : 09th August 2019 07:06 AM | அ+அ அ- |

குழித்துறை அருகே தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து, கணினி, ரூ. 1 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்றோரை போலீஸார் தேடிவருகின்றனர்.
குழித்துறை பகுதியைச் சேர்ந்த பொன்னையன் மகன் ஜாண்ஜேக்கப் (45). இவர் குழித்துறை தீயணைப்பு நிலையம் அருகே வருமான வரி, இதர வரிகள் தொடர்பாக தணிக்கை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் புதன்கிழமை இரவு அலுவலகத்தை பூட்டிச் சென்றாராம். வியாழக்கிழமை காலை வந்தபோது அலுவலகத்தின் முன்பக்கப் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து, ரூ. 1 லட்சம் ரொக்கம், கணினி, டிவிடி பிளேயர் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம். இதுகுறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.