சுடச்சுட

  

  அனைத்து அரசுப் பள்ளிகளிலும் விரைவில்  சீர்மிகு வகுப்பறை: விஜயகுமார் எம்.பி.

  By DIN  |   Published on : 15th August 2019 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் விரைவில் சீர்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் தெரிவித்தார்.
  நாகர்கோவில் எஸ்.எல்.பி.அரசு மேல்நிலைப் பள்ளியில் தொகுதி மேம்பாட்டுநிதியில் இருந்து கலையரங்கு கட்டுவதற்கு ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மா கலையரங்கினை மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் திறந்து வைத்தார்.
  அப்போது, அவர் பேசியது: மாணவர்கள் கல்வியில் சிறந்து  விளங்கவேண்டும் என ஜெயலலிதா விலையில்லா மடிக்கணினி, 
  சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றினார். மாணவர்களின் கல்வித்தரம் உயரும் வகையில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கல்வி நிலையங்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
  கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் சீர்மிகு வகுப்பறை தொடங்கப்பட்டு, கிராமப்புற மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சீர்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதன் மூலம் உயர் பதவிக்கு வரலாம் என்றார் அவர்.
  நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமர், பள்ளியின் தலைமையாசிரியர் முருகன், உதவி தலைமையாசிரியர் வேலவன், அரசு வழக்குரைஞர்கள் ஞானசேகர், சந்தோஷ்குமார், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய முன்னாள் செயலர் சந்தையடி பாலகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலர் கனகராஜன், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் வள்ளிவேலு,  பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai