சுடச்சுட

  

  குமரி மாவட்டத்தில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை இல்லை: ஹெச். வசந்தகுமார் எம்.பி. குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 15th August 2019 06:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கன்னியாகுமரி மாவட்டத்தில்  தண்ணீரை சேமிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மக்களவை உறுப்பினர் ஹெச். வசந்தகுமார் குறிப்பிட்டார்.
  நாகர்கோவில் அருதே புத்தேரி, கீழபுத்தேரி, பாறையடித்தோப்பு, பார்வதிபுரம், வேம்பனூர் உள்ளிட்ட பகுதியில் வாக்காளர் களுக்கு புதன்கிழமை ஹெச். வசந்தகுமார் நன்றி தெரிவித்தார். புத்தேரியில் இருந்து நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர், செய்தியாளர்களிடம் கூறியது, காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீணாகும் நீரை சேமிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும். 
  நீரை சேமிக்க தவறிவிட்டோம். நீரை சேமிக்கும் திட்டத்தை நீண்ட காலத்துக்கு முன்பே தொடங்கி இருக்க வேண்டும். தமிழகத்தில் குளங்களில் தூர் வாரும் பணி நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். குளங்கள் புனரமைப்பில் நீர் மேலாண்மை மற்றும் குளங்கள் தூர்வாரும் பணிகள் முறையாக  நடைபெறவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வீணாக கடலுக்குச் செல்கிறது. வீணாகும் நீரை சேமித்து கோடை காலத்தில் பயன்படுத்தும் வகையில் அரசு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. நான்கு வழிச்சாலை திட்டத்திற்காக பாசனக் குளங்களை அழிப்பதன் மூலம் விவசாயிகள், மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது. 
  குமரி மாவட்ட வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் வெள்ளச் சேதங்களை பார்வையிட்டு வருகிறார். மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் ஸ்டாலின் குறித்து குறை கூறுவதற்கு யாருக்கும் தகுதியில்லை. குமரி மாவட்டத்தின் மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, மீனவர்கள் பிரச்னைகளுக்காக  மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார் அவர்.
  அவருடன், கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலர் என். சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டாரத் தலைவர் அசோக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai