சுடச்சுட

  

  கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 6 லட்சம் செலவில் கட்டப்பட்ட  திறந்த வெளி கலையரங்கம் திறப்புவிழா புதன்கிழமை நடைபெற்றது.
  இவ்விழாவுக்கு,  பள்ளித் தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை வகித்தார். அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் அகஸ்டின் செல்வகுமார் வரவேற்றார்.  கலையரங்கத்தை ஏ.விஜயகுமார் எம்.பி. திறந்து வைத்துப் பேசினார். தொடர்ந்து மாணவர், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், நாகர்கோவில் கூட்டுறவு வீட்டுவசதி கடன் சங்க இயக்குநர் கனகராஜன், முன்னாள் மாணவர் பேரவை நிர்வாகிகள் பால்நாடார், புலவர் நாராயணன், வை.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ஆசிரியர் ராஜலிங்கம் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai