சுதந்திர தினம்: குமரி கடலில் "ரக்ஷா கிரீன் ஆபரேஷன்'

சுதந்திர தினத்தையொட்டி கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்கும் "ரக்ஷா கிரீன் ஆபரேஷன்'

சுதந்திர தினத்தையொட்டி கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்கும் "ரக்ஷா கிரீன் ஆபரேஷன்' கன்னியாகுமரி கடல் பகுதியில் புதன்கிழமை தொடங்கியது.
சுதந்திரதினம் வியாழக்கிழமை (ஆக. 15) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின நிகழ்ச்சியை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து நாடு முழுவதும் உச்ச கட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலைக் கண்காணிக்கும் வகையில் ரக்ஷா கிரீன் எனும் ஆபரேஷன் புதன்கிழமை தொடங்கியது. கன்னியாகுமரி முதல் கூடங்குளம் வரையில் ஒரு பகுதியாகவும், கன்னியாகுமரி முதல் குளச்சல் வரை மற்றொரு பகுதியாகவும் 2 பிரிவாக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும், கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com