"திறந்தும் செயல்படாத பழங்குடியினர் திறன் மேம்பாட்டு மையம்'

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில் பழங்குடியினர் திறன் மேம்பாட்டு மையம் திறந்து

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில் பழங்குடியினர் திறன் மேம்பாட்டு மையம் திறந்து 9 மாதங்களாகியும் செயல்பாட்டுக்கு வரவில்லை என புகார் எழுந்துள்ளது.
கனிமொழியின் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 2016-17 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறையில் பழங்குடியினர் திறன் மேம்பாட்டு மையம் கட்டுவதற்கு ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு, செய்யப்பட்டு, தோட்டமலை செல்லும் வழியில் ஆண்டிப் பொற்றையில் கட்டப்பட்டுள்ள இந்த மையம் 17.11.2018 இல் திறக்கப்பட்டது.
இந்த மையம் திறந்து 9 மாதங்கள் ஆகியும்  செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்த மையம் காணிமக்கள் பிரதிநிதிகள்  பரிந்துரை செய்த காயல்ரோடு தேக்குகாடு பகுதியில் கட்டுவதற்கு வனத்துறை அனுமதியளிக்காததால் மக்கள் எளிதில் செல்ல முடியாத ஆண்டிப்பொற்றை பகுதியில் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பேச்சிப்பாறை ஊராட்சி முன்னாள் தலைவர்  எஸ். ராஜன் கூறியது:  குமரி மாவட்டத்தில்  8 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பழங்குடி மக்களின் கலாசார விழா காயல்ரோடு தேக்குக்காட்டில் நடைபெற்று வந்தது. 
இந்நிலையில் பழங்குடி மக்கள் உயர்கல்வி, வேலைவாய்ப்புகளை பெறும் வகையில் தேவையான பயிற்சி, கலை உள்ளிட்ட திறன்களை மேம்படுத்தவும் "பழங்குடி மக்கள் திறன்மேம்பாட்டு மையம்' அமைக்க கனிமொழியிடம் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இம்மையம் அமைக்க ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்தார். 
இந்த மையத்தை தேக்குக்காடு பகுதியில் கட்டுவதற்கு வனத்துறை அனுமதிக்காததால் மக்கள் எளிதில் சென்று வர வசதியில்லாத ஆண்டிப்பொற்றை பகுதியில் கட்டப்பட்டுள்ளது. மையம் திறந்து 9 மாதங்களாகியும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றார் அவர்.
இதுகுறித்து காணிக்காரர் முன்னேற்றச் சங்க பொதுச்செயலர் பாலன்காணி கூறியது: பேச்சிப்பாறை ஆண்டிப்பொற்றை பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த மையம் திறக்கப்பட்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. பழங்குடியின மக்கள் நலன் கருதி இந்த மையம் செயல்படும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com