குமரி மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தேசியக் கொடி ஏற்றினார். வசந்தகுமார் எம்.பி. உள்ளிட்டோர் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில்,  நகரத் தலைவர் அலெக்ஸ், நிர்வாகிகள் மகேஷ்லாசர், காலபெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
நாகர்கோவிலில் உள்ள மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் வசந்தகுமார் எம்.பி. தேசியக் கொடியேற்றி வைத்து, தியாகிகள் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் குமரி முருகேசன், ஆனந்த், ஆரோக்கியராஜன், ரமணி, ஹெலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பாஜக சார்பில்...
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன், துணைத் தலைவர் முத்துராமன், நாகர்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் மீனாதேவ், நகரத் தலைவர் நாகராஜன், நிர்வாகிகள் தேவ், ராஜன், உமாரதிராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருவட்டாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ப. சுப்பிரமணியன் தேசியக் கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில்,  துணை வட்டாட்சியர்கள் மாத்யூ ஜெய ஜோஸ், மரகதவல்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் எஸ்.என்.எம். இந்து வித்யாலயா பள்ளியில், பள்ளித் தலைவர் ரத்தினசாமி தேசியக் கொடியேற்றினார். பள்ளி முதல்வர் பரமேஸ்வரி முன்னிலை வகித்தார். மாணவி பூர்ணிமா வரவேற்றார். முன்னாள் மாணவரும், சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையின் வழக்குரைஞருமான கிருஷ்ணஸ்ரீதர் கலந்துகொண்டு பேசினார். மாணவி வி.நந்தனா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் இந்திராதேவி மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர். 
நாகர்கோவில் ரோஜாவனம் முதியோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லத்தில், மைய இயக்குநர் அருள் ஜோதி தேசியக் கொடியேற்றி வைத்து முதியோர்களுக்கு இனிப்பு வழங்கினார். சட்ட ஆலோசகர் பாலச்சந்திரன் முன்னிலை வகித்தார். கண்காணிப்பாளர் ஆறுமுகம் வரவேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்ட திருவருட்பேரவை நாகர்கோவில் நகர கிளை பொறுப்பாளர்கள் டேவிட்சன், முனைவர் பத்மநாபன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர். மைய ஒருங்கிணைப்பாளர் சில்வெஸ்டர் நன்றி கூறினார். 
நிகழ்ச்சியில், ஆலோசகர்கள் சுசீலா,மேரி சுஜித், செவிலியர்கள் ஜெய்னி, பிரபா, சந்தியா, காப்பாளர் பிரேமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com