Enable Javscript for better performance
குமரியில் சுத்தமான சாலையோர உணவகம் திட்ட அறிமுகக் கூட்டம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    குமரியில் சுத்தமான சாலையோர உணவகம் திட்ட அறிமுகக் கூட்டம்

    By DIN  |   Published On : 22nd August 2019 06:17 AM  |   Last Updated : 22nd August 2019 06:17 AM  |  அ+அ அ-  |  

    சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுத்தமான சாலையோர உணவகத் திட்டத்தின் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
    சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். கடந்தாண்டில் மட்டும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்துள்ளனர். 
    இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர், நமது கலாசாரம், உணவுகளை பெரிதும் விரும்புகின்றனர். அந்த வரிசையில், முக்கிய சுற்றுலாப் பகுதியில் உள்ள சாலையோர உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உள்ளூர் உணவுகளுக்கும் அவர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு உண்டு.
    இவற்றை சுத்தமாகவும், தரமானதாகவும் பயணிகளுக்கு வழங்கும் வகையில், இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்,  நாடு முழுவதும் சுத்தமான சாலையோர உணவகங்களின் மையம் என்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
     தமிழகத்தில் இந்தத் திட்டம் முதல் முறையாக கன்னியாகுமரியில், விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  இத்திட்டம் குறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் வி.செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறியது:
    நாடு முழுவதும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  இச்சட்டத்தில் உள்ள விதிகள் படி,  நடமாடும் வணிகர்களுக்கு சுத்தமான உணவு தயாரித்தல், விற்பனை ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 
    கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் நடத்திய ஆய்வில் 62 சாலையோர உணவு விற்பனை வணிகர்கள் உள்ளனர்.  இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தின் கீழ் கொண்டு வந்து,  உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகள்படி, உரிமம் பெற்ற பொருள்களை வாங்கி, உணவுகளை தரம், சுத்தமாக தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். 
    முதல் கட்ட ஆய்வு, பயிற்சிகள் முடிவுற்று, நிகழாண்டு இறுதிக்குள் இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.   தமிழகத்தில் 12 மாவட்டத்தில் 14 சுற்றுலாப் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு,  இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
    உணவுகள் தரம் குறைவு, கலப்படம் ஆகியவை குறித்து, 94440 42322 என்ற செல்லிடப்பேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றார் அவர்.
    இந்நிகழ்ச்சியில், அகஸ்தீசுவரம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் தங்க சிவம், தக்கலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவீன் ரகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp