Enable Javscript for better performance
மீனச்சல் கிருஷ்ணசுவாமி கோயிலில் உறியடி விழா- Dinamani

சுடச்சுட

    

    களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
      கேரளத்திலும், குமரி மாவட்டத்திலும் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மீனச்சல்  கிருஷ்ணசுவாமி கோயிலில் அஷ்டமி ரோகிணி திருவிழா கடந்த 19 ஆம் தேதி  தொடங்கி சனிக்கிழமை வரை (ஆக. 24) 6 நாள்கள் நடைபெறுகிறது. 
    5  ஆம் நாள் நாளான வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குழந்தை பருவ கிருஷ்ணனின் வரலாற்றை விளக்கும் வகையில் கண்ணன் விளையாட்டு என்ற உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai