Enable Javscript for better performance
வேளாங்கண்ணிக்கு நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வேளாங்கண்ணிக்கு நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

    By DIN  |   Published on : 24th August 2019 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
    இது குறித்து, தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: 
    வேளாங்கண்ணி மாதா கோயில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து  ஆக. 31 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் மாதம்  7  ஆம் தேதி ஆகிய நாள்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
    இந்த ரயில் நாகர்கோவிலிலிருந்து பிற்பகல் 12.55  மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து செப்டம்பர் 1,  8   ஆம் தேதிகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை  10.45  மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். 
    இந்த சிறப்பு ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் 12 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 4 குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் சாதாரண இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும் இருக்கும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai