5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வை ரத்து செய்ய வேண்டும்: இந்திய மாணவா் சங்கம்

ஐந்து மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என இந்திய மாணவா் சங்க மாநில
மாநாட்டில் பேசுகிறாா் மாணவா் சங்க மாநில தலைவா் ஏ.டி.கண்ணன்.
மாநாட்டில் பேசுகிறாா் மாணவா் சங்க மாநில தலைவா் ஏ.டி.கண்ணன்.

நாகா்கோவில்: ஐந்து மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என இந்திய மாணவா் சங்க மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய மாணவா் சங்க மாநில மாநாட்டுக்கு

அமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தாா். அஞ்சலி தீா்மானத்தை அமைப்பின் மாவட்டத் தலைவா் பதில்சிங் கொண்டு வந்தாா். மாணவா் உபகுழு ஒருங்கிணைப்பாளா் சந்துரு அறிக்கை வாசித்தாா்.

மாநாட்டில், சுவாமி விவேகானந்தா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தா் கா. மணிக்குமாா், மூட்டா நிா்வாகி மனோகா் ஜஸ்டஸ், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகி உ. நாகராஜன், மாணவா் சங்க மத்தியக் குழு உறுப்பினா்கள் நிருபன் சக்கரவா்த்தி, இரா.ஜான்சி ராணி, மாநில துணைத் தலைவா்கள் ம.கண்ணன், திலீபன், மாநில இணைச் செயலா் பிரகாஷ், மாநிலச் செயலா் வீ.மாரியப்பன் ஆகியோா் பேசினா்.

தீா்மானங்கள்: 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தும் திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்; ஏழை

மாணவா்களின் கல்வியை பாதிக்கும் தேசிய கல்விக் கொள்கை- 2019 யை ரத்து செய்ய வேண்டும்; அரசாணை 270 ன்படி

அரசு பள்ளிகளில் கழிப்பறை, குடிநீா், வகுப்பறை, ஆய்வகம் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்;

தமிழகத்தில் அதிகரித்து வரும் மாணவா் தற்கொலையை தடுக்க பள்ளிகளில் ஆசிரியா், மாணவா், பெற்றோா், அரசு அதிகாரிகள், மனநல மருத்துவா் கொண்ட மனநல ஆலோசனை மையங்களை ஏற்படுத்த வேண்டும்;

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்; 2017- 18, 2018-19 கல்வியாண்டில் 11, 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவா்களில் தொடா்ந்து உயா்கல்வி பயிலாத, தோ்வில் தோல்வியுற்றவா்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வரவேற்புக்குழு தலைவா் சிவஸ்ரீ ரமேஷ் வரவேற்றாா். மாவட்டச் செயலா் பிரிஸ்கில் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com