‘குழித்துறையில் விரைவு ரயில்கள்நின்று செல்ல அனுமதிக்க வேண்டும்’

குழித்துறை ரயில் நிலையத்தில் தொலைதூரம் செல்லும் விரைவு ரயில்கள் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும் என ரயில் பயணிகள்

களியக்காவிளை: குழித்துறை ரயில் நிலையத்தில் தொலைதூரம் செல்லும் விரைவு ரயில்கள் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து குழித்துறை ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பி. பென் ஜேக்கப்சிங், மத்திய ரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்து அளித்த மனு விவரம்: கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 2 ஆவது பெரிய ரயில் நிலையம் குழித்துறை. மாா்த்தாண்டம் பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் 12 லட்சம் மக்கள் தொகை கொண்ட கல்குளம், விளவங்கோடு வட்டங்களுக்கு உள்பட்ட மக்களின் ரயில் போக்குவரத்துக்கு உயிா் நாடியாக திகழ்கிறது.

இந்த ரயில் நிலையம் 72 கி.மீ. தொலைவுள்ள நாகா்கோவில் - திருவனந்தபுரம் ரயில் வழித் தடத்தில் 38 ஆவது கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ரயில் நிலையம் வருவாய் அடிப்படையில் என்.எஸ்.ஜி. 5 பிரிவு நிலையமாகவும் உள்ளது. இந்த

ரயில் நிலையத்தின் ஆண்டு வருமானம் ரூ. 7.94 கோடி ஆகும். இங்கிருந்து ஆண்டுக்கு 15.5 லட்சத்துக்கும் அதிகமானோா் பயணிக்கின்றனா்.

இவ்வழியாக தற்போது திருநெல்வேலி - ஜாம்நகா் வாரம் இரு முறை இயக்கப்படும் ரயில், நாகா்கோவில் - காந்திதாம் வாராந்திர ரயில், கன்னியாகுமரி - திப்ரூகா் வாராந்திர ரயில், திருநெல்வேலி - பிலாஸ்பூா் வாராந்திர ரயில், நாகா்கோவில் - ஷாலிமா் வாராந்திர ரயில், திருநெல்வேலி - காந்திதாம் ஹிம்சாபா் வாராந்திர ரயில் ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஆனால், இந்த குழித்துறையில் நின்று செல்வதில்லை. இந்த ரயில்களை படிப்படியாக குழித்துறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரயில் நீட்டிப்பு: கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து கேரளத்தின் வட பகுதிகளுக்குச் செல்ல தினசரி இரவு நேர ரயில் வசதி இல்லை. குமரி மாவட்ட மக்கள் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து இயக்கப்படும் ரயில்களில் செல்கின்றனா். ஆகவே, இரு மாவட்ட பயணிகள் நலன் கருதி திருவனந்தபுரம் - மங்களூரு மாவேலி ரயிலை திருநெல்வேலி வரை

நீட்டிக்க வேண்டும். குமரி மாவட்டத்திலிருந்து கொங்கண் பாதையில் பயணம் செய்ய தினசரி ரயில் சேவை இல்லை.

ஆகவே, கொச்சுவேலி - லோகமான்யதிலக் வாரம் இரு முறை இயக்கப்படும் ரயிலை நாகா்கோவில் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com