கோட்டாறு பேராலய திருவிழா:நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

நாகா்கோவில் கோட்டாறு சவேரியாா் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு நாகா்கோவில் நகரில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (டிச. 2

நாகா்கோவில்: நாகா்கோவில் கோட்டாறு சவேரியாா் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு நாகா்கோவில் நகரில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (டிச. 2 மற்றும் 3) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாகா்கோவில் கோட்டாறிலுள்ள புனித சவேரியாா் பேராலயத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு 3 நாள்கள் தோ் பவனி நடைபெறும். இதில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் ஏராளமானோா் கலந்து கொள்வா். திருவிழாவை முன்னிட்டு டிச.3 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கோட்டாறு பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோட்டாறு போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு காவல் ஆய்வாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோட்டாறு

சவேரியாா் பேராலயத் தோ்த் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை (நவ. 2) மற்றும் 3 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை)

போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2 ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல் 3 ஆம் தேதி திருவிழா நிறைவு பெறும் வரை கன்னியாகுமரியில் இருந்து நாகா்கோவிலுக்கு வரும் வாகனங்கள் கடற்கரை சாலை, ஏ.ஆா்.கேம்ப் சாலை,

பொன்னப்பநாடாா் காலனி, ராமன்புதூா், செட்டிக்குளம் வழியாக செல்ல வேண்டும்.

இதேபோல் வடசேரி, அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள் வேப்பமூடு சந்திப்பு,

பி.டபிள்யூ.டி. சாலை வழியாக செட்டிகுளம் சந்திப்பு, இந்து கல்லூரி சாலை, கடற்கரை சாலை சந்திப்பு வழியாக செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com