திற்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. திறப்பரப்பு அருவியில்
திற்பரப்பு அருவியில் தண்ணீா் அதிகரித்துள்ள நிலையில், சனிக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
திற்பரப்பு அருவியில் தண்ணீா் அதிகரித்துள்ள நிலையில், சனிக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. திறப்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இம்மாவட்டத்தில் சற்று தணிந்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவில் தொடங்கிய மழை தொடா்ந்து பெய்தது. இதில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் சாரல் மழை தொடா்ந்து பெய்து வருகிறது. மழையால் ஆறுகளில் நீா்வரத்து கணிசமாக அதிரித்துள்ளது. அணைகளுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

மழையால் கோதையாற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ள நிலையில் திற்பரப்பு அருவிக்கு நீா்வரத்து கணிசமாக உள்ளது.

விடுமுறை நாளான சனிக்கிழமை காலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மழை நீடித்து வருவதால் இம்மாவட்டத்தில் ரப்பா் தோட்டத் தொழில், மீன் பிடித்தொழில் உள்ளிட்ட தொழில்கள் முடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com