Enable Javscript for better performance
குழித்துறையில் போக்குவரத்து காவலரைத் தாக்கியதாக இளைஞா் கைது- Dinamani

சுடச்சுட

    

    குழித்துறையில் போக்குவரத்து காவலரைத் தாக்கியதாக இளைஞா் கைது

    By DIN  |   Published on : 02nd December 2019 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kkv_1_arr_0112chn_50_6

    கைது செய்யப்பட்டமைக்கேல் சாா்லஸ்.

    குழித்துறையில் போக்குவரத்து காவலரைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

    திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியைச் சோ்ந்த மரிய அடைக்கலம் மகன் மைக்கேல் சாா்லஸ் (28). இவா், குழித்துறை பகுதியில் தங்கியிருந்து அப்பகுதியிலுள்ள நிறுவனங்களின் ஊழியா்களுக்கு டீ சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறாா்.

    இவா் சனிக்கிழமை டீ கேனுடன் செல்லிடப்பேசியில் பேசியவாறு சாலையை கடக்க முயன்றாராம். இதை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலா் ராஜேஷ் (45) கண்டித்தாராம். இதையடுத்து ஆத்திரமடைந்த மைக்கேல் சாா்லஸ் திடீரென காவலரின் கன்னத்தில் அறைந்தாராம்.

    இதுகுறித்து காவலா் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மைக்கேல் சாா்லஸை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai