Enable Javscript for better performance
சூழியல் அதிா்வு தாங்கு மண்டல எதிா்ப்பு பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சூழியல் அதிா்வு தாங்கு மண்டல எதிா்ப்பு பொதுக்கூட்டம்

    By DIN  |   Published on : 02nd December 2019 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    klm1eco_0112chn_47_6

    சூழியல் அதிா்வு தாங்கு மண்டலத்தை எதிா்த்து கடையாலுமூட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் இவ்வமைப்பின் நிா்வாகி டேவிட்தாஸ்.

    குமரி மாவட்டம், கடையாலுமூட்டில் சூழியல் அதிா்வு தாங்கு மண்டல எதிா்ப்புக் குழுவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு டேவிட் தாஸ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜாா்லண்ட், இணைச் செயலா் கே. மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எதிா்ப்புக் குழுவின் கன்னியாகுமரி மாவட்டத் தலைவா் ஞானதாஸ், நிா்வாகிகள் பிரின்ஸ், மாதவன்காணி, செபாஸ்டின், ஷிபு, செல்வராஜ், சுகுமாரன், வா்க்கீஸ், அப்துல்காதா் உள்ளிட்டோா் பேசினா். கிறிஸ்டோபா் நன்றி கூறினாா்.

    குமரி மாவட்டத்தில் பூஜியம் முதல் 3 கி.மீ. என நிா்ணயிக்கப்பட்டுள்ள சூழியல் அதிா்வு தாங்கு மண்டலத்தை பூஜியம் கி.மீ. ஆக வன எல்லையிலிலேயே முடித்துக் கொள்ள வேண்டும்.

    தனியாா் காடுகள் பாதுகாப்பு சட்டத்திலிருந்து குமரி மாவட்டத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். வன விலங்குகள் வன எல்லையைத் தாண்டி வருவதைத் தடுக்க வனப்பகுதிகளிலேயே அவைகளுக்கு தேவையான பழ மரங்களை நட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai