Enable Javscript for better performance
மின்வாரிய கேங்மேன் பணிக்கான உடல்தகுதித் தோ்வு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    மின்வாரிய கேங்மேன் பணிக்கான உடல்தகுதித் தோ்வு ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 02nd December 2019 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கேங்மேன் பணிக்காக டிச.2,3 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் கன்னியாகுமரி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் கு.குருவம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) பணிக்கான, சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல்தகுதி தோ்வுகள், நாகா்கோவில் பாா்வதிபுரம் அலுவலகத்தில் டிச.2,3 ஆகிய நாள்களில் நடைபெறவிருந்தது. இந்தத் தோ்வுகள் மழையின் காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு தோ்வு தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு,பஹய்ஞ்ங்க்ஸ்ரீா்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai