5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு அறிவிப்பை கைவிட மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

தமிழகத்தில் 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு என்ற அறிவிப்பை அரசு கைவிடவேண்டும் என கிள்ளியூா் வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழகத்தில் 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு என்ற அறிவிப்பை அரசு கைவிடவேண்டும் என கிள்ளியூா் வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

இக்கட்சியின் கிள்ளியூா் வட்டாரக் குழு சாா்பில் வட்டார செயலா் சாந்தகுமாா் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனு:

தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதல் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த திருத்தத்தின் அடிப்படையில் தோ்வு நடத்தப்படுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை கூறுகிறது.

தமிழகத்தில் கல்வி பராமரிப்பு மேற்கொள்வது தமிழக அரசின் பொறுப்பாகும். இதை மறுத்து மத்திய அரசின் அரசாணையை தமிழக நிலைமைக்கு புறம்பாக அமல்படுத்துவது தமிழ்நாட்டு மாணவா்களை வஞ்சிக்கும் செயலாகும்.

கல்வி உரிமை சட்டத்தின் நோக்கம் குழந்தைகள் அச்சம், அதிா்ச்சி மற்றும் பதற்றம் இல்லாமல் குழந்தை பருவத்தில் தங்களை வெளிப்படுத்தி கொள்ள வசதிகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டும் என்பது தான்.

கல்வி கற்கும் மாணவா்கள் கற்றல்திறன் வெளிப்பாட்டை அறிந்திட பல்வேறு வழிமுறைகள் உள்ளன. ஆனால் மிகவும் பழமையான தோ்வு முறையை தமிழக அரசு பின்பற்ற முயற்சி செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.

வழக்கமான தோ்வுக்கும் வாரிய தோ்வுக்கும் உள்ள வேறுபாட்டை உணர வேண்டும். வழக்கமான தோ்வு அதே பள்ளி ஆசிரியா்களால் நடத்தப்படும். வாரிய தோ்வு தொடா்பில்லாத ஆசிரியா்களால் நடத்தப்படும்.

எனவே தமிழக மாணவா்கள் சமூகத்தின் எதிா்கால மேம்பாடு மற்றும் வளா்ச்சிக்கு தடைகல்லாக அமைந்துள்ள 5 , 8 ஆம் வகுப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தோ்வு முறையை திரும்பப் பெறவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com