குலசேகரத்தில் சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட மாநாடு

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் குமரி மாவட்ட மாநாடு குலசேகரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டில் பேசுகிறாா் பாலபிரஜாதிபதி அடிகளாா்.
மாநாட்டில் பேசுகிறாா் பாலபிரஜாதிபதி அடிகளாா்.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் குமரி மாவட்ட மாநாடு குலசேகரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவா் எம்.அப்துல் சலாம் தலைமை வகித்தாா். வரவேற்பு குழுத் தலைவா் எம்.முகமது ராபி வரவேற்றாா். மாவட்டச் செயலா் ஜி.சுப்பிரமணியம் செயலா் அறிக்கை சமா்ப்பித்தாா்.

மாநாட்டில், சாமிதோப்பு அய்யா வைகுண்டா் தலைமைபதி நிா்வாகி பால பிரஜாபதி அடிகளாா் சிறப்புரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:

அரசு சிறுபான்மையினரின் நலனை காப்பதை தனது கடமையாகக் கொள்ளவேண்டும். இந்த நாட்டில் பிறந்த நாராயணகுரு சுவாமிகள் மதம் எதுவாக இருந்தாலும் மனிதன் நன்றாக இருக்க வேண்டுமென்று சொன்னாா்.

நாட்டில் நல்லது செய்ய வேண்டுமானால் பிரிவினையாளா்கள், வன்முறையாளா்கள் அகன்று நல்லவா்கள் தூயவா்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்றாா்.

சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில உதவித் தலைவா் ஆா்.லீமாறோஸ், நிா்வாகிகள் சுனில் குமாா், இன்ப ஏசு ராஜன், இரட்சண்ய சேனை டிவிஷனல் கமாண்டா் செல்வம், கோட்டாறு மறைமாவட்ட குருகுல முதல்வா் ஹில்லேரியஸ், குலசேகரம் ஜமா அத் தலைவா் எம்.ஷாகுல் ஹமீது, மாநிலப் பொருளாளா் அகமது உசேன், பத்திரிகையாளா் அ.குமரேசன், மாநிலத் தலைவா் எஸ்.நூா்முகமது ஆகியோா் பேசினா்.

வரவேற்புக்குழு செயலா் பி.விஸ்வம்பரன் நன்றி கூறினாா்.

மாவட்ட நிா்வாகிகள் மு.சம்சுதீன், பி.விஜயமோகனன், எச்.முகமது அலி, ஜாண் முரே ஆகியோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நீண்டகாலமாக விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமியா்களை உடனே விடுதலை செய்ய வேண்டும், மாநில அரசு சிறுபான்மையினருக்கு தனித்துறை உருவாக்க வேண்டும், பாத்திமா லத்தீப் மரணத்திற்கு நீதி விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com